நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் !

0
281

நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 2017 ல் நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது. நீட் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் நாங்கள் எதிர்த்து வருகிறோம். மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்தில் தமிழகம் நாட்டிற்கு முன்னுதாரணமாக உள்ளது. நீட் தேர்வு குறித்து அசைக்க முடியாத கருத்தொற்றுமை நிலவுகிறது.

தமிழ்நாடு மருத்து படிப்புக்கான சேர்க்கை சட்டம் நிறைவேற்றபட்டது. ஆனால் இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. முனைவர் அனந்தகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் அனைத்து தொழில் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய அடித்தளமிட்டார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

நீட் தேர்வுக்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது தமிழகத்தின் குரல் இந்தியா முழுவதும் ஒலிக்க துவங்கி இருக்கிறது. மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் கடிதம் எழுதியுள்ளனர். இதனை தொடர்ந்து நாங்களும் தீர்மானம் நிறைவேற்ற முனைந்துள்ளோம். நீட்தேர்வு முறைகேடுகளில் பல காலம் கஷ்டப்பட்டு படித்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதும், அவசியமற்றதும், மாநில அரசின் உரிமையை பறிக்கும் விதமான நீட் தேர்வை முழுமையாக நீக்க வேண்டும். தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை திருத்த வேண்டும். இந்த தீர்மானத்தை இந்த சபையில் நிறைவேற்றி தர உறுப்பினர்களை வேண்டி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here