லவ் ஜிகாத்தால் நேர்ந்த கொடூரம்; ஆசிரியரை விஷ ஊசி போட்டு கொலை செய்த அப்துல் ஹபீஸ்..

0
130

சேலம்: சேலத்தில் தனியார் விடுதியில் தங்கி வேலை செய்து வந்த இளம்பெண் மாயமானதை தொடர்ந்து, விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. காதலன் அப்துல் ஹபீஸ், தனது இரு காதலிகளுடன் சேர்ந்து, ஆசிரியை அல்பியாவை (லோகநாயகி) விஷ ஊசி செலுத்தி கொலை செய்த பின்னர், ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் மாயம் – போலீசாரின் தீவிர விசாரணை:

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் விடுதியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாயகி (எ) அல்பியா எனும் ஆசிரியை தங்கி இருந்தார். அவர் கடந்த 4 நாட்களாக காணாமல் போனதை தொடர்ந்து, விடுதி நிர்வாகம் பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தது. விசாரணையில், அவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ஹபீஸ் என்பவருடன் கடைசியாக தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்து, செல்போன் தடயங்களை பகுப்பாய்வு செய்தபோது, அல்பியாவின் மொபைல் ஏற்காடு மலைப்பாதையில் சுவிட்ச் ஆஃப் ஆனது கண்டறியப்பட்டது. இதனால் அப்துல் ஹபீசை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது.

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான லோக நாயகியுடன் கடந்த ஒரு வருடமாக பழகிய அப்துல் ஹபீஸ், லோகநாயகி (எ) அல்பியாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் தங்கள் மதமான இஸ்லாத்துக்கு மாற வேண்டும் என்று அப்துல் ஹபீஸ் வற்புறுத்தியதாகவும், லோக நாயகியும் அவனை நம்பி மதம் மாறி புர்கா அணிந்து பணிக்கு சென்று வரும் அளவுக்கு மாறியதாகவும் கூறப்படுகின்றது.

அதன் பின்னர் லோக நாயகியை ஆசைக்கு மட்டுமே பயன் படுத்தி வந்துள்ளார் அப்துல் ஹபீஸ், இந்த நிலையில் அப்துல் ஹபீஸ், தன்னை போலவே மருத்துவமாணவி மோனிஷா என்பவருடனும் காவியா சுல்தானா என்பவருடனும் நெருங்கி பழகிவருவதை தெரிந்து சண்டையிட்ட லோக நாயகி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அப்துல் ஹபீஸிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில் தான் தவறை உணர்ந்து விட்டதாகவும், திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் ஆசை வார்த்தை கூறிய அப்துல் ஹபீஸ், சில தினங்களுக்கு முன்பு லோக நாயகியை அழைத்து சென்று. தனது இரண்டு காதலிகளுடனும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளான் இந்த நிலையில் ஏற்காடு செல்லும் மலைசாலையில் 60 அடி பாலம் அருகே இருவரும் தோழிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது லோக நாயகிக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்து கீழே தள்ளியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

.கொலையாளிகள் கைது – பரபரப்பு விசாரணை:

இந்த தகவலை போலீசாரிடம் ஒப்புக்கொண்ட அப்துல் ஹபீசின் வழிகாட்டுதலில், அல்பியாவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

மற்றும், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அப்துல் ஹபீஸ், காவியா சுல்தானா, மோனிஷா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இந்த கொடூரக் கொலைச் சம்பவம் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்று நிகழ்வுகள் அடிக்கடி நடந்தாலும் சிறுபான்மை சமூகம் என்று கூறி அவர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசியல் வேதனைக்குரியது. மதத்தின் பெயரால் பல பெண்களை ஏமாற்றி மதமாற்றம் செய்து அவர்களை சீரழிக்கும் இதுபோன்ற நிகழ்விலிருந்து ஹிந்து மற்றும் கிறிஸ்துவ பெண்கள் தங்களை பாதுகாக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here