கலைஞர் நூலகம் நினைச்சா சிரிப்பு வருது..! மறுபடியும் ரெண்டா ?

0
277

சட்டசபையில் 110 விதியின் கீழ், அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் குறிப்பிட்ட ஒரு அறிவிப்பு தான் கருணாநிதி பெயரில் நூலகம்.

அதுல என்ன இருக்கு, ஒவ்வொரு மாவட்டத்துலயும் நூலகம் வந்தா  அது நல்லது தானேன்னு தானே யோசிக்கிறீங்க நிச்சயம் நல்லது தான் அது யாருக்குன்னா ஆளும் கட்சியான திமுகவிற்குத்தான்.

திராவிட அரசுகள் மேற்கொள்ளும் கட்டுமானத்திற்கான ஒரு உதாரணத்தை சொல்லிட்டு நான் நூலகம் பக்கம் வறேன்.

கட்டுமானங்களை பொறுத்தவரைக்கும் அதிமுக, திமுக இந்த ரெண்டு திராவிட கட்சிகளும் எவ்வளவு மோசமான கட்டுமானங்களை மேற்கொள்ளுவாங்கன்னு தமிழ்நாடு வீடு வசதிவாரியம் மக்களுக்கு கட்டிக்குடுக்குற வீடுகளை வெச்சே தெரிஞ்சுக்கலாம்.

நான் கோயமுத்தூர் காரென்றதுனால கோயமுத்தூர்ல நான் பார்த்து கேள்விப்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பற்றி சொல்றேன். கோவைப்புதூர் பகுதியில அரசு கட்டிக்கொடுத்த வீட்டை பாவையிட நண்பர் ஒருத்தர் போயிருந்தார். எல்லாருக்கும் சொந்தவீடுதானே கனவு அந்த நண்பரும் அப்படியான கனவுலதான் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு போயிருந்தார். அங்கபோயி பாத்த அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சிச்சு அடித்து உடைக்கப்பட்ட கதவுகள், மது பாட்டில்கள், இரவில் விலைமாதர்களுடன் சேட்டை செய்யும் இளைஞர்கள் இட்டுச்செல்லும் பலான பொருட்கள் இவை அனைத்தையும் பார்த்த அவருக்கு தலையே சுற்றிவிட்டதாம். அவர் அப்படி புலம்பி நான் பார்த்ததே  இல்லை, குடும்பம் குட்டியோட அந்த இடத்துல எப்படி குடுத்தனம்  நடத்துறதுன்னு ஒரே கவலை அவருக்கு.

சரிப்பா, அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கும் இந்த நூலகத்துக்கு என்ன சம்மந்தம்னு தானே கேக்குறீங்க? மேலே சொன்ன அந்த குடியிருப்பு மாதிரிதான் இன்றைய முதல்வர் அவர்களின் அப்பாவோட பேர்ல கட்டியிருக்கும் நூலகத்தோட தரமும் இருக்குது. அதுக்கு உதாரணம் தான் மதுரையில 215 கோடிக்கு நத்தம் சாலைல பிரம்மாண்டமா கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம். 2.13 லட்சம் சதுர அடி பரப்பளவுல 6 தலங்களை கொண்ட  கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பல பிரிவுகள் ஏகப்பட்ட புத்தகங்களும் இருக்குது.

இவ்வளவு இருந்து என்ன பிரயோஜனம். மழை வந்தால் அங்கங்க அருவிபோல் தண்ணீர் ஊத்துதுல்ல, என்ன தான் அதிநவீன நூலகமாக இருந்தாலும் மழை பெய்தாலே உள்ளே மழ தண்ணி வந்துருதுன்னு பொதுமக்கள் புகார் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. பார்கிங்கில குளம் வெச்சு கட்டுனதுபோல ஆயிருச்சு. ஒருவழியா பொதுப்பணித்துறை அதுக்கான நடவடிக்கை எடுத்து அதை சரி செஞ்சுட்டோம்னு சொன்னாங்க ஆனா கடந்த மே மாதம் மதுரையில பேஞ்ச கோடை மழைக்கு அது தாக்குபிடிக்கல தரைதளத்தில் இருக்குற  கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவுன்னு இந்த ரெண்டு இடத்துலயும் மழைநீர் புகுந்ததால அந்த ரெண்டு பிரிவுகளையும் தற்காலிகமா மூடுனாங்க.

மக்களோட வரிப்பணம் சுமார் 216 கோடி செலவு செஞ்சு கட்டின அதிநவீன நூலகம் இப்படி மோசமாக இருக்குதுன்னா, எவ்வளவு ஊழல் நடந்திருக்கும்? கோடை மழைக்கே தாக்குபிடிக்காத அந்த மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மழைக்காலங்கள்ல என்ன நிலைக்கு வரும்ங்கறது கருணாநிதிக்கே வெளிச்சம்.

சரி ஓகே இப்போ நம்ம முதல்வர் சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியிட்டுருக்கக்கூடிய அறிவிப்புகள் தான் இவ்வளவு நம்மள எழுத வெச்சுருக்கு அது என்னனா ?

* கோவையில் இளைய தலைமுறைகள் பயன்படும் வகையில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கருணாநிதி பெயரில் அமைக்கப்படும்.

* மதுரை, கோவையை தொடர்ந்து திருச்சியிலும் கருணாநிதி பெயரில் நூலகம், அறிவியல் மையம் அமைக்கப்படும்.

அப்பிடின்னு அடுத்த சம்பாத்தியத்துக்கு ஒரு புதிய அறிவிப்புகளை குடுத்துருக்கார்.

தங்களோட அறிவுப்பசிக்காகவும், தங்களோட வாழ்க்கையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டு போகவும், தங்களோட உலக அறிவை வளர்த்துக்கொள்ளவும் நூலகம் வருகிறவர்களை நிம்மதியான வாசிப்புக்கு ஒரு இடம் அமைக்கிறீங்க கொஞ்சம் தரமானதா கொடுத்தா நல்ல இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here