வெண்கலப்பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைக்கு இந்திய துணை குடியரசுத்தலைவர் வாழ்த்து.!

0
180

ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்தவகையில் பாரிஸ் ஒலிம்பிக் 2024-ல் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து குடியரசுத் துணைத் தலைவர் தனது எக்ஸ் பதிவில்,

மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோரது சிறப்பான பங்களிப்பை பாராட்டி உள்ளார். நாட்டின் இளைஞர்களுக்கு அவர்கள் உத்வேகம் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஒலிம்பிக்கில் ஒரு இந்தியராக இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கரின் சிறப்பான சாதனையையும் பாராட்டினார். அவருக்கும், சரப்ஜோத் சிங்கிற்கும் எதிர்கால போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here