ஆரம்பத்தில் இருந்தே நீட் எதிர்ப்பில் மும்புரமா இருந்தது திமுக தான் அதற்கு காரணம் திமுகவை சேர்ந்தவர்கள் அதிகம் மருத்துவக்கல்லூரிகள் வைத்திருக்கிறார்கள்.
நீட் வந்ததாலே அப்படி அவர்களுக்கு என்ன நஷ்டம் ஆயிருக்கும் ?
மேனேஜ்மென்ட் கோட்டா என்று சொல்லி அவர்கள் இஷ்டத்திற்கு மருத்துவ சீட்டை கோடிக்கணக்கில் விற்பனை செய்வது நடக்காமல் போய்விட்டது.
அரசு நிர்ணயம் செய்கின்ற தொகையை மட்டும் தான் வசூலிக்க முடியும்.
நீட்டுக்கு முன்பு மேனேஜ்மென்ட் கோட்டா என்று சொல்லி 75% சீட்டை நிரப்பி கல்லா கட்டுவார்கள், இப்போது 25% தான் மேனேஜ்மென்ட் கோட்டா எத்தனை கோடிகள் துண்டு விழும்னு நீங்களே பாத்துக்கோங்க. சும்மாவா கத்துகிறார்கள் ?
நீட் கொண்டுவருவதற்கு முன்பு +2 மட்டும் பாஸ் ஆனா போதும் பணம் கொடுத்தது எப்பிடியாவது மெடிக்கல் சீட் வாங்கிவிடலாம். ஆனால் இப்பொது கதையே வேறு நீட் தேர்வில் வெற்றிபெற்றால் மட்டும் தான் சீட்.
இப்பவும் நம்ம தம்பி பயாஸ் மாதிரி பணம் கொடுத்து கூட இங்கே மெடிக்கல் சீட் வாங்கலாம் ஆனா அதுக்கும் நீட் பாஸாயிருக்கணும். சொந்தமா மருத்துவ கல்லூரி வைத்திருந்தாலும் கூட நீட் பாஸாகவேண்டிய கட்டாயம் உள்ளது.
இப்படி படிப்பை வியாபாரமாக மட்டும் பார்க்கின்ற நம் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளோட பணவெறிக்கு நிறைய மாணவர்கள் பலியானதுதான் மிகப்பெரும் துயரம்.
நீட் தோல்வியால் அனிதா தற்கொலைன்னு சொல்றாங்க, இது அந்த பொண்ண ஊர் ஊரா கூட்டிட்டு சுற்றிய அரசியல் வாதிகள் செய்த கொலை.
அடுத்தடுத்து நீட் தற்கொலை நடக்கும்போது அதற்கான தீர்வு என்னவென்று எந்த அரசியல்வாதியும் பேசவில்லை. தற்கொலை எதற்கும் தீர்வாகாது நீங்கள் நீட் தேர்வில் வெற்றிபெற என்ன வசதி வேண்டுமோ செய்து தருகிறோம் நீங்க எதற்கும் சளைத்தவர்கள் அல்ல உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. தயாராகுங்கள் என்று ஒருவர் கூட சொல்லவில்லை.
மாறாக அரசியல்வாதிகள் என்ன சொன்னார்கள் என்றால் நீட் மாணவர்களுக்கு எதிரானது, கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களால் இதை எழுத முடியாது இது பெரிய பூதம் என்றெல்லாம் மாணவர்களை பயமுறுத்தினார்கள்.
தமிழ்நாடு அரசாங்கம் ஒரு பாடத்திட்டம் தயார் செய்து அதில் படிக்கிற மாணவன் தேர்வில் தோல்வியடைகிறான் என்றால் அதற்கு அரசு தான் வெட்கப்படணும். ஆனால் மாணவர்களால் முடியாது என்று சொல்வார்கள். இதே தமிழகத்தை சேர்ந்த எத்தனையோ மாணவர்கள் நீட்டில் சாதனை செய்துகொண்டுவருகிறார்கள். அவர்களை எல்லாம் உதாரணமாக எடுத்து நீட் தேர்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.
தமிழகத்தின் பழைய கழகங்கள் நீட்டை எதிர்ப்பதில் ஒரு லாபம் இருக்கிறது ஏனென்றால் அவர்களிடம் சொந்தமாக மருத்துவ கல்லூரி இருக்கிறது. ஆனால் நேற்று வந்த விஜய் ஏன் எதிர்க்கிறார் ?
நடிகர் விஜய்யுடைய அடுத்தபடம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. திமுகவை பகைத்துக்கொண்டால் அந்த படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்படும். சன் பிக்ச்சர், ரெட் ஜெயிண்ட் போன்ற நிறுவனங்களின் உதவி இல்லாமல் அப்படம் வரவே வராது. அந்த பயம் அவருக்கு இருக்குமா இல்லையா ?
திமுகவின் அழுத்தத்தின் காரணமாக விஜய் அப்படி பேசியிருக்கலாம்னு சிலர் சொல்கிறார்கள், அவர் திமுகவின் B டீம் என்று சிலர் சொல்கிறார்கள் என்னவாக இருந்தாலும் மாணவர்களின் படிப்புவிஷயத்திலா அரசியல் செய்வது? ஓ.. அவரும் அரசியல்வாதி தானே ? அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்? – இது பெரிய தளபதியோட வசனம்.
இதுல மிகப்பெரிய காமெடி என்னவென்றால் விஜய் நடித்து வெளிய வந்து ஓடாமல் பிளாப் ஆனா பைரவா படம் கூட மெடிக்கல் மாஃபியா பற்றிய படம் தான்.
தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன் துவங்கி பைரவா இன்னும் சில படங்கள், மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் மாணவர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் குறித்தும், அக்கல்லூரியின் முதலாளிகளான அரசியல்வாதிகளால் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும் படமாகவே இருக்கும்.
வருடா வருடம் 10th, +12 ல, சாதனைப்படைக்கின்ற மாணவ மாணவிகளை அழைத்து பரிசு கொடுக்கிற விஜய், ஒரு தடைவையாவது தமிழகத்தில் நீட் தேர்வில் சாதனைபடைத்த மாணவர்களை அழைத்து பேசியது உண்டா?
10th , +2 போல நீட் தேர்வும் கடினமானது தானே? அவர்களையும் அவர் ஊக்குவிக்கவேண்டும் தானே? அனைவரையும் வேண்டாம் தேசிய அளவில் சாதனை படைத்தவர்களையாவது அவர் ஊக்குவிக்கலாமே அதை அவர் செய்யமாட்டார். ஏனென்றால் முதலாளி கோபித்துக்கொள்வார்.
நீட்டை பற்றிய சரியான புரிதல் இல்லாமலோ, அல்லது வேண்டும் என்றோ த.வெ.கழக தலைவர் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசியிருப்பாரேயானால். அது மாணவர்களை அவர் வஞ்சிக்கும் செயலாகும்.
திமுக மற்றும் அவர்களது கூட்டணி காட்சிகள் தான் இதுவரை மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லி வந்தார்கள், ஆனால் அவர்களைப்போலவே நடிகர் விஜய்யும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்ல துவங்கிவிட்டார்.
ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் நீட்டால் பாதிக்கப்படுகிறார்கள் என்று திமுகவின் வசனத்தை அப்படியே பேசும் விஜய். எத்தனை ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நீட்டால் நனவாயிருக்கிறது என்பதை விஜய் அறியாமளா இருந்திருப்பார்.
ஒருபுறம் தனது அரசியலுக்காக மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசையும் வழங்கி அஸ்திவாரம் போடும் விஜய். அதே அரசியலுக்காக மாணவர்களின் மருத்துவ கனவை குழி தோண்டி புதைத்துவிடக்கூடாது.
கடைசியில் தளபதி விஜய் தளபதி ஸ்டாலினாகவே மாறிவிட்டார்.