கன்னியாகுமரியில் பிரதமர் மோடி 3வது நாளாக இன்று (ஜூன் 01) தியானம் மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி மூன்று நாள் தியானத்தை மே 30ம் தேதி இரவு துவக்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில், மூன்று அறைகளில் ஒன்று, பிரதமருக்கு ‘ஏசி’ வசதியுடன் தயார் செய்யப்பட்டது. தியானத்தில் பிரதமர் மவுன விரதமும் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், இன்று (ஜூன் 01) 3வது நாளாக பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக, சூரிய நமஸ்காரம் செய்ய தியானத்தை நிறுத்திவிட்டு பிரதமர் மோடி வெளியே வந்தார். மேகமூட்டம் காரணமாக, சூரிய நமஸ்காரம் செய்யாமல், பிரதமர் மோடி மீண்டும் தியானம் செய்ய சென்றார்.
அவர் மதியம் 1.45 மணிக்கு தியானத்தை நிறைவு செய்கிறார். திருவள்ளுவர் சிலைக்கு சென்று வணங்கிய பின், விருந்தினர் மாளிகைக்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.