திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கத்தின் செலடா நோக்கி சென்ற கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. இன்று காலை 9 மணியளவில் நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் அதிவேகத்தில் மோதியது.
இதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம்புரண்டு உருக்குலைந்தன. இந்த விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளில் பலரும் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது சம்பவ இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.