தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது கிறிஸ்தவர்கள் போட்ட பிச்சை என்று ஜார்ஜ் பொன்னையா என்ற பாதிரியார் பொதுவெளியில் பேசியது நாமெல்லாம் அறிந்ததே.! அதற்கு திமுகவோ முதல்வரோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக கடந்த 2021-ஆம் ஆண்டு CSI மிஷனரியின் 75 வது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் திமுக ஆட்சிக்கு வந்தது கிறிஸ்தவர்களால்தான் என்று பேசினார். அதுமட்டுமில்லாமல் முதல்வரும் திமுக தலைவர்களும் இந்த அரசு சிறுபான்மையினருக்கான அரசு என்று மேடைதோறும் கட்டியம் கூறிவந்தார்கள். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக கிறிஸ்தவரான லியோனி நியமிக்கபட்டார், தமிழக அரசு தேர்வாணைய உறுப்பினராக கத்தோலிக்க பாதிரியார் மரியசூசை என்பவர் உறுப்பினராக நியமிக்கபட்டார்,
பாதிரியார் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் வேறு கிறிஸ்தவர்கள் நியமிக்கபட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் கடந்த 09/06/2024 அன்று Group-4 பணியிடங்களூக்கான தேர்வை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வுக்கான வினாத்தாளில் முதல் கேள்வியே ஏசு கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார் என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த வினாவிற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமே சரியான விடையை தேர்வு செய்திருப்பார்கள், அதன்மூலம் இந்து இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிக்கும் நோக்கத்தில் வினாத்தாள் வடிவமைக்கபட்டு உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது .
Group-4 தேர்வு தமிழக அரசின் கடைநிலை ஊழியர்களை தேர்வு செய்யும் தேர்வாகும் அதற்கும் ஏசுவின் வருகையை அறிவித்தவருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. குறிப்பாக இந்த வினா தேர்வின் தமிழ் மொழி பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது, தமிழ் மொழி சார்ந்து சங்க இலக்கியம் முதலாக பதிணென் மேல் கணக்கு நூல்கள் பதினென் கீழ் கணக்கு நூல்கள் ஐம்பெரும் காப்பியங்கள், எட்டுதொகை, புறநானூறு, அகநானூறு, பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்ய பிரபந்தம் என ஆயிரமாயிரம் பண்டைய நூல்கள் தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அவற்றையெல்லாம் பாட்த்திட்டத்தில் இருந்து புறந்தள்ளி விட்டு அதிகமான அளவில் கிறிஸ்தவ மதம் சார்ந்த பாடங்கள் மற்றும் திராவிட புரட்டுகளை பாடங்களாக சேர்க்கப்பட்டு வரலாற்றை அழிக்கும் வேலையை தமிழக அரசு செய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக அரசு பணியாளர் தேர்வில் இவ்வாறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த மண்ணுக்கும் மொழிக்கும் சம்பந்தமில்லாத கிறிஸ்தவ மதம் பற்றி அரசு பணியாளர் போட்டி தேர்வில் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் என்ன? எனவே தமிழக அரசே மத மாற்றத்தினை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்றே கருத வேண்டியுள்ளது. கிறிஸ்தவ மிஷனரிகள் வீதி தோறும் மதமாற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழர் பண்பாடு, வாழ்வியல் முறை மற்றும் வழிபாட்டு முறையை அழிக்கும் வகையிலும் மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழக அரசே நூதன மத திணிப்பில் ஈடுபடுவதும், அரசு பணியாளர் தேர்வுக்கான போட்டி தேர்வில் ஏசு கிறிஸ்துவின் வருகை என்று கேள்வி எழுப்புவதும் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக அரசு அரசு பணியாளர்களை தேர்வு செய்ய தேர்வை நடத்தியதா? அல்லது மதபிரச்சாரத்துக்கு பாதிரியார்களை தேர்வு செய்ய தேர்வு நடத்தியதா? என்று ஐயமுறும் வகையில் வினாத்தாள் அமைக்கபட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. தமிழக அரசு பணியில் சேர்வதற்கான போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்ய பல தனியார் பயிற்சி மையங்களில் இணைந்து இளைஞர்கள் முன் தயாரிப்பு செய்துவருகிறார்கள். இந்நிலையில் சமீபத்திய வினாத்தாளை பார்க்கும்போது இனி தமிழக அரசு பணியில் சேர இந்து இளைஞர்கள் பைபிள் வகுப்புக்கும் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுமோ என்று அச்சமும் ஏற்படாமல் இல்லை. எனவே திமுக அரசு சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழர்களின் அடையாளத்தை, பண்பாட்டை அழிக்கும் விதமாக செயல்படக் கூடாது என்றும் வினாத்தாள் மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் தயாரிக்க கூடாது என்றும் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்தவேண்டும் என்றும் இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுகொள்கிறது.