சோனியாவுக்கு பதில் ராகுல், ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.!

0
301

உத்திரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் சர்மாவும் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள் என்பதால், இருவரும் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

இதற்காக, சோனியா, ராகுல், பிரியங்கா, ராபர்ட்வாத்ரா ஆகியோர் அமேதி வந்தடைந்தனர். இங்கிருந்து ரேபரேலி சென்று ராகுல் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான தொகுதியாகும். ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சோனியா, இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. அவருக்கு பதில் ராகுல் களம் காண்கிறார்.

ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி களமிறங்கி உள்ள நிலையில், உ.பி.யில் உள்ள ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

தற்போது ரேபரேலி தொகுதி எம்.பி.யாக சோனியா காந்தி இருக்கிறார். மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி தேர்வாகி உள்ள நிலையில் அத்தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

அமேதி தொகுதியில் ராகுல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு கே.எல். சர்மா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here