ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மாநில அமைப்பாளர்கள் கூட்டம் ராஞ்சியில் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் ஜி பகவத் மற்றும் அகில பாரத பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசாபலே மற்றும் அனைத்து அகில பாரத பொறுப்பாளர்கள் மற்றும் விவித சேத்திர அமைப்புகளின் அகில பாரத அமைப்பு பொதுச் செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் மாநில அமைப்பாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இக்கூட்டத்தில் சமுதாய மாற்றத்திற்காக ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்டுள்ள 5 செயல் திட்டங்கள் பற்றியும், நாடெங்கிலும் நடந்து முடிந்துள்ள முகாம்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்ட உள்ளது. இன்று தொடங்கி வரும் 14ஆம் தேதி மாலை 6 மணி வரை இக்கூட்டமான நடைபெறும்.