நக்சலைட்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை; சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் அதிரடி

0
307

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில், நக்சலைட்டுகள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் ஒரு பாதுகாப்பு படை வீரர் காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக, தகவல் கிடைத்தது. அப்பகுதியில் 4 மாவட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் நக்சலைட்டுகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஒரு பாதுகாப்பு படை வீரருக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல், நாராயண்பூர் மாவட்டத்திலும் நக்சலைட்டுகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே கடந்த இரண்டு நாட்களாக துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. சுக்மா, தந்தேவாடா, நாராயண்பூர் கான்கேர் ஆகிய 4 மாவட்டங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here