நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடியை குடும்பம் இல்லாத நபர் என விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் பா.ஜ., அமைச்சர்களும், நிர்வாகிகளும் சமூக வலைதளங்களில் தங்களின் பெயருக்கு பின்னால், தாங்கள் மோடியின் குடும்பம் என்பதை தெரிவிக்கும் வகையில் ‘மோடி கா பரிவார்’ என்ற வார்த்தையை சேர்த்தனர்.
என் மீது வைத்துள்ள அன்பு காரணமாக தேர்தல் பிரசாரத்தின் போது, நாடு முழுதும் பலர் சமூக வலைதள கணக்கில், தங்கள் பெயருக்கு பின்னால் மோடி கா பரிவார் எனப்படும் மோடியின் குடும்பம் என்ற வார்த்தையை சேர்த்திருந்தனர். இது எனக்கு பெரும் பலத்தை தந்தது.
இந்த தேர்தல் வெற்றியின் வாயிலாக நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி மக்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது. இனி, மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்.
இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று தனது X பக்கத்தில் வெளியிட்ட பதிவில்: என் மீது வைத்துள்ள அன்பு காரணமாக தேர்தல் பிரசாரத்தின் போது, நாடு முழுதும் பலர் சமூக வலைதள கணக்கில், தங்கள் பெயருக்கு பின்னால் மோடி கா பரிவார் எனப்படும் மோடியின் குடும்பம் என்ற வார்த்தையை சேர்த்திருந்தனர். இது எனக்கு பெரும் பலத்தை தந்தது.
தேர்தலில் தே.ஜ., கூட்டணிக்கு மக்கள் மூன்றாவது முறையாக வெற்றியை கொடுத்துள்ளனர். இது சாதனை. இந்த வெற்றியின் வாயிலாக நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி மக்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக அனைவருக்கும் நன்றி. இனி, மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.