விஜய் திவாஸின் 25 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதமாகவும், 1999 போரின்போது வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி த்ராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்றார்.
கார்கில் போரில் வெற்றி பெற்றது மட்டுமல்ல, உண்மை, கட்டுப்பாடு மற்றும் வலிமைக்கு அற்புதமான உதாரணத்தையும் கொடுத்தோம்… பொய்யும் பயங்கரமும் சத்தியத்தின் முகத்தில் தோற்கடிக்கப்பட்டன என்று விஜய் திவாஸ் உரையில் மோடி கூறினார்.
கார்கில் விஜய் திவாஸ் ஷ்ரதாஞ்சலி சமரோவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “வீரர்கள் தேசத்திற்காக செய்த தியாகங்கள் அழியாதவை என்பதை இந்த நாள் நமக்கு சொல்கிறது. கார்கில் போரில் வெற்றி பெற்றது மட்டுமல்ல, உண்மை, கட்டுப்பாடு மற்றும் வலிமைக்கு அற்புதமான உதாரணத்தையும் கொடுத்தோம். பொய்யும் பயங்கரமும் சத்தியத்தின் முகத்தில் தோற்கடிக்கப்பட்டன” என்று கூறினார்.
“கடந்த காலங்களில் பாகிஸ்தான் அதன் அனைத்து ஒழுக்கக்கேடான மற்றும் வெட்கக்கேடான முயற்சிகளுக்காக தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும், அதன் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. பயங்கரவாதம் மற்றும் பினாமி போர்கள் மூலம் அதன் தொடர்பைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் இன்று நான் பேசுவது பயங்கரவாதத்தின் எஜமானர்களுக்குத் தெளிவாகக் கேட்கும் இடத்திலிருந்து! இந்த பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு அவர்களின் மோசமான திட்டங்கள் ஒருபோதும் வெற்றியடையாது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன், ”என்று 25 வது விஜய் திவாஸ் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.
“அக்னிபாத் திட்டமானது ராணுவம் செய்த தேவையான சீர்திருத்தங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு… ராணுவம் என்றால் அரசியல்வாதிகளுக்கு சல்யூட் அடிப்பது, அணிவகுப்பு நடத்துவது என்று சிலர் நினைக்கிறார்கள் ஆனால் எங்களைப் பொறுத்தவரை ராணுவம் என்பது 140 கோடி நாட்டு மக்களின் நம்பிக்கை. ராணுவத்தை இளமையாக மாற்றுவது, ராணுவத்தை தொடர்ந்து போருக்குத் தகுதியாக வைத்திருப்பதுதான் அக்னிபாத்தின் குறிக்கோள். துரதிர்ஷ்டவசமாக, சிலர் தேசிய பாதுகாப்பு தொடர்பான இத்தகைய உணர்ச்சிகரமான பிரச்சினையை அரசியலின் பாடமாக்கியுள்ளனர். இதே ஆட்கள்தான் ஆயிரக்கணக்கான கோடி ஊழல்களை செய்து நமது ராணுவத்தை பலவீனப்படுத்தினார்கள்” என பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை மறைமுகமாக தாக்கி பேசினார்.
விஜய் திவாஸின் முக்கியத்துவம்: கார்கில் போர் அதிகாரப்பூர்வமாக 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 26, 1999 அன்று முடிவடைந்தது. லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியையும், துணிச்சலுடன் போராடிய அவரது வீரர்களின் தியாகத்தையும் நினைவுகூரும் கார்கில் விஜய் திவாஸ் ஆண்டுதோறும் இந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது. அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, போரின் முடிவில் 527 பேர் இறந்தனர், 1,363 பேர் காயமடைந்தனர்.