தமிழ் இலக்கியத்தில் முக்கிய பங்களிப்பு செய்த வ.வே.சுப்பிரமணிய ஐயர்

0
2

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர், புகழ்பெற்ற தமிழறிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழ் இலக்கியத்தில் முக்கிய பங்களிப்பு செய்தவர் ஆவார்.

இவர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள வரகனேரியில் பிறந்தவர். தமிழ் இலக்கியத்தில் நவீன சிறுகதையின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

va ve சுப்பிரமணிய ஐயர் 1881 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி, வேங்கடேச ஐயர் மற்றும் காமாட்சியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்த இவர், தனது 12 ஆவது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் மாநில அளவில் ஐந்தாவது இடம் பெற்றார். பின்னர் பி.ஏ. பட்டம் பெற்று, சட்டம் பயின்று வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். 1907 ஆம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற லண்டன் சென்றபோது, அங்கு இந்தியா ஹவுஸில் வீர சாவர்க்கர் போன்ற புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு, அபிநவ பாரத் சங்கத்தில் இணைந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ராணுவப் பயிற்சிகள் பெற்று, பல இளைஞர்களுக்கு பயிற்சியும் அளித்தார். பிரிட்டிஷ் அரசின் தேடுதலால், சீக்கியர் வேடத்தில் பிரான்ஸ் வழியாக இந்தியாவுக்குத் திரும்பினார்.

சிறுகதைகள்: தமிழில் முதல் சிறுகதையான “குளத்தங்கரை அரசமரம்” என்ற படைப்பை எழுதினார். “மங்கையர்க்கரசியின் காதல்” உள்ளிட்ட சிறுகதைகளும் இவரது புகழ் பெற்ற படைப்புகளாகும்.

திருக்குறளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதற்கு விரிவான முன்னுரை எழுதினார். கம்பராமாயணத்தை பதம் பிரித்து வெளியிட்டு, அதற்கு ஆய்வு முன்னுரைகளும் எழுதினார்.

பாரதியின் “கண்ணன் பாட்டு” நூலுக்கு, முன்னுரை எழுதியது, தமிழில் நவீன இலக்கிய விமர்சனத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. “கம்பராமாயண ரசனை” என்ற கட்டுரைத் தொடரும் இவரது திறனாய்வுத் திறனை வெளிப்படுத்துகிறது.

தமிழ்க் குருகுலம்: 1922 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மாதேவியில் “தமிழ்க் குருகுலம்” பாரத்வாஜ ஆசிரமம் என்ற கல்வி நிறுவனத்தை நிறுவினார். இதன் நோக்கம் தேசப்பற்றும் ஆன்மிகமும் பிணைந்த இளைஞர்களை உருவாக்குவதாகும்.

1925 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி, தனது மகள் சுபத்திரா மற்றும் மாணவர்களுடன் பாபநாசம் கல்யாண தீர்த்த அருவிக்குச் சென்றபோது,

அருவியில் விழுந்த மகளைக் காப்பாற்ற முயன்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். 
அவருக்கு அப்போது வயது 44.

தமிழகத்தில் அவரது நினைவைப் போற்றும் வகையில், திருச்சி வரகனேரியில் உள்ள அவரது இல்லத்தை  ” va ve சுப்பிரமணிய ஐயர் நினைவகமாக ” போற்றப்படுகிறது.

1998 ஆம் ஆண்டு அவரது படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.

va ve சுப்பிரமணிய ஐயர் தமிழ் இலக்கியத்திற்கும், இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் ஆற்றிய பங்களிப்புகள் அவரை என்றும் நினைவுகூரத்தக்க மாமனிதராக ஆக்குகின்றன. அவரது வீரத்தையும் தியாகத்தையும் தமிழ் தொண்டையும் நினைவுகூர்ந்து போற்றிவணங்குகிறது தேசியவாதி நியூஸ்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here